ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 20 ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு உடனடியாக தடைபெற சிதம்பரம் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில், 21 ஆம் தேதி இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். அவரை கைது செய்து 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதற்கிடையே, டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களைத் தொடர்ந்து, மனு மீதான விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில்
இதனையடுத்து, தன்னை சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனு இன்று நடைபெற்ற விசாரணையில், சிபிஐ வழக்கில் உரிய நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு தாக்கல் செய்யலாம் என்றும் முன்ஜாமின் மனு பலனற்றதாகிவிட்டதால் விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம் முன்ஜாமின் அளிக்க மறுத்துவிட்டது.