ருஹுணு பல்கலைக்கழகத்தில் மாணவியொருவரை மோசமாக பகிடிவதைக்குள்ளாக்கிய 19 மாணவர்களின் விளக்கமறியல் எதிர்வரும் செப்ரெம்பர் 9ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று இவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது, விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.
மாணவியை பகிடிவதைக்குள்ளாக்கிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததன் பின்னர், கடந்த 6ம் திகதி 19 மாணவர்களும் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தனர்.
சித்திரவதைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை பகிடிவதை செய்த குறச்சாட்டில் விளக்கமறியலில் உள்ளவர்களில் பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.