மீனை சாப்பிட்டு உடல் எடை விரைவாக கரையும்….

டயட் என்றாலே நமக்கு பிடிக்காத உணவை உட்கொள்வதாக தான் இருக்கும். ஆனால், இந்த டயட் முறை சற்று வித்தியாசமானது.

எல்லோருக்கும் பிடித்த மீனை சாப்பிட்டு உடல் எடையை குறைக்க செய்வது.

சில மீன்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன. இந்த மீன் சிறியதாக இருந்தாலும் ஏராளமான நன்மைகளை வழங்கக்கூடியது.

ஆய்வு ஒன்றில் மீன் டயட் மேற்கொள்வதால் உடலில் இருக்கும் கொழுப்பு சேமிப்பு செல்களை, கொழுப்பை கரைக்கும் செல்களாக மாற்றி உடலில் சேரும்

அதிகமான கொழுப்பை கரைக்கவும், மேலும் அதிகமாக கொழுப்பு சேராமல் தடுக்கவும் முடிகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

கொழுப்பு செல்களின் வகைகள் மூன்று வகைப்படும்
  1. வெள்ளை
  2. பழுப்பு
  3. வெளிர் பழுப்பு
வெள்ளை

உடலுக்கு சக்தியை உண்டாக்கி தருகிறது.

பழுப்பு

வளர்ச்சிதை கொழுப்பு மூலம் உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்த செய்கிறது.

வெளிர்நிற பழுப்பு

கொழுப்பு செல்கள் குழந்தைகளிடம் தான் அதிகம் இருக்கின்றன. மூத்தோர் மத்தியில் குறைவாக தான் இருக்கும்.

இது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிப்பதால். இதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என ஆய்வாளர்கள் நம்பினார்கள்.

இது குறைய தொடங்குவதால் தான் நடுவயதில் அதிகம் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருக்கிறது எனவும் கருதினர். இதற்கு சிறந்த உணவு எது என்ற ஆராய்ச்சியில் ஈடுப்பட்ட போது மீனை தெரிவு செய்தனர்.

முடிவு

மீன் மற்றும் மீன் எண்ணெய் சேர்க்கைகள் உடலில் கொழுப்பு சேமிக்கும் செல்களை, கொழுப்பை கரைக்கும் செல்களாக மாற்றி உடல் எடையை குறைக்கவும், உடலில் அதிகளவு கொழுப்பு சேராமல் தடுக்கவும் உதவுகிறது. எனவே உடல் எடையை விரைவான குறைக்க விரும்புபவர்கள் மீனை சாப்பிடுங்கள்.