சிகிச்சைக்கு வந்த சிறுமியை வன்கொடுமை செய்த காம கொடூரன்!

இந்தியாவின் உத்திரபிரேதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ரசாவை பகுதியை சார்ந்த 17 வயதுடைய சிறுமியின் பெயர் கவிஷா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). சிறுமி தனது பெற்றோர்களுடன் வசித்து வந்த நிலையில்., சிறுமிக்கு திடீரென உடல் நல குறைவானது ஏற்பட்டுள்ளது. இதற்காக மருந்துகள் எடுத்தும் பலனில்லை என்பதால்., அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதியாகியுள்ளார்.

இவருக்கு உதவியாக இருப்பதற்கு சிறுமியின் தாயாரும் மருத்துவமனையிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில்., சம்பவத்தன்று இரவு நேரத்தில் சுமார் 10 மணியளவில் மருத்துவமனையின் பணியாளர் சிவானந்தன் என்ற காம கொடூரன்., சிறுமிக்கு ஊசி போடவேண்டும் என்றும் கூறி., அந்த வளாகத்தில் கீழே இருக்கும் அறைக்கு அழைத்துள்ளான்.

சிறுமி தனது தாயாரை உறக்கத்தில் இருந்து எழுப்ப முயற்சித்த சமயத்தில்., தாயார் உறங்கட்டும் ஊசி மட்டும் தான் என்று கூறி நயவஞ்சகமாக அழைத்து சென்ற காம கொடூரன்., சிறுமி கீழே உள்ள அறைக்கு வந்ததும் மாத்திரையொன்றை வழங்கி உட்கொள்ள வைத்துள்ளான். இதனை சாப்பிட்ட சிறுமி சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார்.

மயக்கத்தில் இருந்த சிறுமியை காம கொடூரன் சிவானந்தன் மற்றும் இதே மருத்துவமனையில் பணியாற்றி வரும் விஷால் என்ற காம கொடூரனும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமி மயக்கத்தில் இருந்து எழுந்து தன்னிலை அறிந்து., தாயரிடம் சென்று விஷயத்தை கூறி கதறியழுத்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார்., இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு காம கொடூரன்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.