பலங்கொட நகரத்திற்கு அருகில் உள்ள பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது 14 வயதான மகள் மீது கொதிக்கும் நீரை ஊற்றி கொடுமைப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு சிறுவர் பாதுகாப்பு பணியகத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, பலங்கொட சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று சோதனைகளை ஆரம்பித்துள்ளார்.
அதற்கமைய அந்த சிறுமியின் முதுகு முழுவதும் சுட்ட காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகளின் தந்தை உயிரிழந்த நிலையில் பொலிஸா் வீடுகளுக்கு செல்லும் சந்தர்ப்பத்தில் அங்கு தாய் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபராக தாயை கைது செய்வதற்காக பலங்கொட பொலிஸார் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.