கபாலி, காலா படங்களின் இயக்குனர் ரஞ்சித் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அம்பேத்கர் வழியை தீவிரமாக பின்பற்றி வருகிறார்.
அண்மையில் அவர் ராஜராஜசோழன் குறித்து பேசியது பெரும் சர்ச்சையில் முடிந்தது. இதற்காக அவருக்கு பெரும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்தன.
இந்நிலையில் வேதாரண்யத்தில் ஒருவர் பொது மக்கள் இருக்கும் இடத்தில் அம்பேத்கர் சிலையை தனிநபராக உடைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ரஞ்சித் இதற்காக குரல் கொடுத்துள்ளார்..
அண்ணலுக்கு எதிரி சித்தாந்தம் தான் மனிதர்கள் அல்ல. மனித பேரினத்தின் மீதுமகத்தான அன்பை செலுத்தியவர்.
சிலை உடைத்த சாதிமனநோயினை தீர்க்கவல்ல மகத்தான மருத்துவர் அவர். அசமத்துவத்தை எதிர்த்து சமத்துவத்திற்க்கான பாதையை உண்டாக்கியவர். வா சகோதரா!சரி செய்து கொள்(வோம்) #1000AmbedkarRaised pic.twitter.com/GEWRcblIGy— pa.ranjith (@beemji) August 26, 2019