தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகத்தீஸ்வரம் பகுதியை சார்ந்த பெண்மணிக்கு., திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த காம கொடூரன் கார்த்திகேயன் என்பவன் பாலியல் தொல்லை வழங்கியுள்ளான். இதனையடுத்து அந்த பெண் காம கொடூரன் கார்த்திகேயனை அடித்து உதைத்த வீடியோ காட்சிகளானது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது கல்லூரி படிப்பினை நிறைவு செய்திருக்கும் பெண்ணின் பெயர் ரமாதேவி.
இவருக்கு படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்துவைத்து விடலாம் என்று எண்ணிய பெற்றோர்., ராமதேவிக்கு அழகான மாப்பிள்ளையை தேடி., இவர்களின் திருமணத்திற்காக நிச்சயித்தார்த்தமும் நடத்தி முடித்துள்ளனர். இந்த நிலையில்., ராமதேவி தனக்கு நடந்த கொடுமையை தட்டிக்கேட்கும் விதமாக செய்த அருமையான செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
ராமதேவியின் இல்லத்திற்கு அருகில் பழக்கடை நடத்தி வருபவனின் பெயர் காம கொடூரன் நாடக காதல் கார்த்திகேயன். இவன் அந்த பகுதியில் பழக்கடைக்கு வரும் பழங்களை வைப்பதற்காக தென்னை கூரையினால் ஆன கிட்டங்கியும் வைத்துள்ளான். இந்த நேரத்தில்., கிட்டங்கியில் பழங்களை எடுக்க சென்ற ராமதேவிக்கு பாலியல் தொல்லை வழங்கியுள்ளான்.
தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்து விசாரணைக்கு பின்னரே தண்டனை கிடைக்கும். அவனுக்கு உடனடியாக தண்டனை கிடைக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார். இவரின் திட்டப்படி காம கொடூரனின் கிட்டங்கிக்கு முன்னர் அலைபேசியில் வீடியோ பதிவு செய்து தயாராக பத்ரகாளியாக மாறி ராமதேவி காத்திருந்தார்.
இதனை அறியாத காம கொடூரன் கார்த்திகேயன் கிட்டங்கிக்கு விரைந்த சமயத்தில்., சற்றும் எதிர்பாராத விதமாக ராமதேவி காம கொடூரனை அடித்து நொறுக்கியுள்ளார். இவரின் அடியை தாங்கி முடியாத காம கொடூரன் ஐயோ..அம்மா என்று அலறியபடி ஓட்டம் எடுக்கவே., மாரியம்மாள் ஈட்டியை வைத்து துரத்துவார் போல விரட்டி விரட்டி புலந்து தள்ளியுள்ளார்.
இந்த சமயத்தில்., பெண் பேச்சிலும் வீரத்திலும் பத்ரகாளியாக அவதாரம் எடுத்து ஓடவிட்டு புலந்த விடீயோக்களை பதிவு செய்து கொண்டுள்ளார். இந்த உரையாடலின் போது கார்த்திகேயன் அடிக்காதே செத்துவிடுவேன் என்று கூறவே., செத்து தொலை… உன்னை விட்டால் நீ என்னென்ன செய்வாய் என்று அடித்து நொறுக்குகிறார். மேலும்., எனது உறவினர்களுக்கு இந்த விஷயம் தெரிந்தால் நீ கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இருப்பாய் என்று எச்சரித்துள்ளார்.
இது குறித்த வீடியோ காட்சிகளானது வெளியாகி இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. இதனையடுத்து இந்த வீடியோ பதிவு காவல் துறையினர் வசம் காணப்பட்டதை அடுத்து., இது குறித்த விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவம் தான் சிறப்பான மற்றும் தரமான சம்பவமாக இருக்கும்.