மின்சார பேருந்துகளுக்கான கட்டண விவரம் வெளியானது!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் முதல்முறையாக மின்சார பஸ்கள் சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து – திருவான்மியூர் இடையே இயக்கப்படுகிறது. தினமும் காலை, மாலை என 4 முறை இந்த பஸ்கள் ஓடும். குளிர்சாதன வசதியுடன் கூடிய இந்த 2 பஸ்களை அசோக் லேலண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பஸ் 200 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்க முடியும். இந்த பேருந்தில் 32 பயணிகள் இருக்கையில் அமர்ந்தும், 25 பயணிகள் நின்றும் பயணம் செய்யலாம். இந்த பஸ்சில் மாநகர போக்குவரத்து கழகத்தின் டீலக்ஸ் பஸ் டிக்கெட் கட்டணம் போன்று ரூபாய்.11 முதல் 25 ரூபாய் வரை வசூலிக்கப்படும்.

மின்சார பேருந்துகளின் பேட்டரிகளுக்கு மாநகர போக்குவரத்து கழக பல்லவன் பணிமனையில் ரீசார்ஜ் செய்யப்படும்.