கைது செய்யப்பட்ட பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவர் சின்னையா சிவரூபன் அளித்த தகவல்களின் அடிப்படையில், ஆயுதங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பளை மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவர் சின்னையா சிவரூபன், பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்தநிலையில், அவரிடம் இருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில், பளை, கரந்தாய் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி ஆயுதங்கள் நேற்று கைப்பற்றப்பட்டதாக, சிறிலங்கா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஏ.கே-47 துப்பாக்கி ஒன்று, இரண்டு மகசின்கள், 120 ரவைகள், 11 கைக்குண்டுகள், 10 கிலோ எடையுள்ள PE 10 வெடிபொருள், தொலைகாட்டி ஒன்று என்பனவே கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மருத்துவர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார் என்றும் சிறிலங்கா காவல்துறை தலைமையகம் கூறியுள்ளது.