கர்நாடகாவில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் சித்தார்த், நீரில் மூழ்கி இறந்துள்ளதாக தடயவியல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காபிடே உரிமையாளரான தொழிலதிபர் சித்தார்த் கடந்த ஜூலை 29 ஆம் தேதி கர்நாடக மாநிலம் நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இரண்டு நாள்களுக்குப்பின் அவரது உடல் மீட்கப்பட்டது.
இந்தநிலையில், தொழிலதிபர் சித்தார்த் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட வந்த போலீஸ் வந்தனர் . மேலும், தற்போது தடயவியல் துறை வெளியிட்ட அறிக்கையில், நீரில் மூழ்கியதால் சித்தார்த்தின் நுரையீரலில் தண்ணீர் புகுந்து இறந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. தற்கொலையா, மர்மச்சாவு என பல்வேறு கோணத்தில் நடைபெற்று வந்த விசாரணையில் , சித்தார்த் ஆற்றில் குதித்து நீரில் மூழ்கியதால், தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.