சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த கணவன், மனைவியின் தலையை தனியாக வெட்டி எடுத்து கொண்டு காவல் நிலையத்துக்கு நள்ளிரவில் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் Puri நகரை சேர்ந்தவர் கணேஷ் பிஹீரா. இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இதையடுத்து விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்து மனைவியுடன் தங்குவார்.
அப்படி வரும் போதெல்லாம் மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு உள்ளதாகவும், தனக்கு துரோகம் செய்வதாகவும் கூறி அவருடன் சண்டையிட்டு வந்தார்.
அப்படி நேற்று முன் தினம் ஊருக்கு வந்த கணேஷ் இரவு 11 மணிக்கு மனைவியுடன் வாக்குவாதம் செய்தார்.
இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் கூரான பொருளை கொண்டு மனைவியை தாக்கிவிட்டு அவர் கழுத்தை தனியாக வெட்டியெடுத்து கொன்றார்.
பின்னர் தலையை ஒரு பையில் போட்டு கொண்டு சைக்களில் 8 கிலோ மீட்டர் பயணம் செய்து காவல் நிலையத்து வந்த கணேஷ் அங்கு பொலிசில் சரணடைந்தார்.
இதன்பின்னர் கணேஷ் வீட்டுக்கு சென்ற பொலிசார் அவர் மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு இது குறித்து கணேஷிடம் விசாரித்து வருகிறார்கள்.