இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தை சார்ந்த 12 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் அங்குள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த நிலையில்., கடந்த சில நாட்களாக தனக்கு கடுமையாக வயிறு வலிப்பதாக கூறி பெற்றோரிடம் அழுதுள்ளார்.
முதலில் சாப்பாடு ஏதேனும் சேராமல் அல்லது பிற பிரச்சனையாக இருக்கலாம் என்று எண்ணி பெற்றோர்கள் கண்டுகொள்ளாமல் விட்ட நிலையில்., தனது வயிற்று வலியை கூறி கதறி அழுதுள்ளார். இதற்குப்பின் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பெற்றோர்கள்., மருத்துவரிடம் சிறுமி வயிறு வலிப்பதாக தொடர்ந்து கூறுகிறார் என்று கூறவே., சிறுமியை சோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் செய்வதறியாது திகைக்கவே., சிறுமியிடம் இது குறித்து விசாரித்த போது பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிறுமி பயின்று வரும் பள்ளியில் ஆசிரியனாக பணியாற்றி வரும் காம கொடூரன் ஒருவனால் பல மாதங்களுக்கு முன்னதாக பாலியல் தொல்லை வழங்கப்பட்டதை சிறுமி கூறி கதறியழுத்துள்ளார்.
இதனை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து அங்குள்ள மலப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில்., இதனை அறிந்த ஆசிரியன் என்ற பெயரில் காம கொடூரன் தலைமறைவாகியுள்ளான். இதனையடுத்து காவல் துறையினர் அவனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.