நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை வித்யா பாலன். தயாரிப்பாளர் போனி கபூர் வறுபுறுத்தி கேட்டதால் தான் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக அவர் முன்பே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை வித்யா பாலனிடம் சென்னையில் ஒரு இயக்குனர் தவறாக நடக்க முயன்றதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். எனக்கு ஞாபகம் இருக்கிறது. அப்போது நான் சென்னையில் தான் இருந்தேன். ஒரு இயக்குனர் என்னை சந்திக்க வந்தார். காபி ஷாப்பில் அமர்ந்து பேசலாம் என கூறினேன். ஆனால் அந்த இயக்குனர் நிறைய பேசணும், ரூமுக்கு போவோம் என ரூமுக்கு செல்வதிலேயே குறியாக இருந்தார்.
அதன் பின் நாங்கள் இருவரும் ரூமுக்கு சென்றோம், ஆனால் நான் ரூமுக்கு சென்ற பின் கதவை திறந்தே வைத்தேன், வெறும் ஐந்து நிமிடத்தில் அந்த இயக்குனர் கிளம்பி சென்றுவிட்டார் என வித்யா பாலன் கூறியுள்ளார்.