சத்தான பச்சைப்பயறு குழம்பு.! செய்வது எப்படி.!

தேவையான பொருட்கள்

பூண்டு – 5
பச்சை பயறு – 1 கப்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
வெங்காயம் – 2
தக்காளி – 1

தாளிக்க

எண்ணெய் – 2 டீஸ்பூன்,
கடுகு – 1/4 டீஸ்பூன்,
சீரகம் – 1/4
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
வெங்காயம் – 1.

செய்முறை:

முதல் நாள் இரவு பச்சை பயறை கழுவி ஊற வைத்து கொள்ளவும். பின்னர் மறுநாளில், குக்கரில் தக்காளி, பச்சை பயறு, வெங்காயம், பூண்டு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 4-5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

வெந்த பின்னர் இறக்கி லேசாக மசித்து, கடாயில் எண்ணெய் விட்டு, சீரகம் , கடுகு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து பொறித்து அதன் பின்னர், வெங்காயம் சேர்த்து வதக்கி விடவும். கருவேப்பிலையை உருவி அதில் போட்டு வதக்கவும்.

நன்கு வெங்காயம் வதங்கிய பின்னர், மசித்து வைத்திருக்கும் பயரை அதில் கொட்டிக் கிளறி கொதிக்க வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

கொஞ்சம் கெட்டிப் பதம் வந்த பின்னர் இறக்கினால், சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயறு குழம்பு ரெடி.!