இளம்பெண்ணின் இல்லத்திற்கு அல்வாவோடு விரைந்த காம கொடூரன்.!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மற்றும் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் தன்னை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அதிகாரியாக அறிமுகம் செய்து., அரசு வேலை பெற்று தருவதாக கூறி அங்குள்ள இளைஞர்களிடம் பணம் ஏமாற்றி பிழைத்து வந்துள்ளான்.

இதனைப்போன்று பெண்களிடமும் சென்று வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி பணத்தை வாங்கிவிட்டு தொடர்ந்து அலைக்கழித்து வந்துள்ளான். இதனையடுத்து வேலை எப்போதுதான் வரும் என்று கேட்கும் பெண்களிடம்., படுக்கைக்கு வர சொல்லி கூறியுள்ளான்.

இதுமட்டுமல்லாது சில பெண்களை தனது அலைபேசியில் படம் பிடித்து., இணையத்தில் அவதூறாக மாபிங் செய்து பரப்பிவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளான். இந்த நிலையில்., இவனது தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர்., தனது தோழியிடம் விபரத்தை கூறி கதறியழுத்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி தனது தோழியை காப்பாற்றும் பொருட்டு., காம கொடூரனுக்கு மெசேஜ் அனுப்பி அவனது அழைப்பிற்கு ஏற்றாற்போல செயல்படுவதாக கூறச்சொல்லி வரவழைத்துள்ளார்.

இதனையடுத்து சம்மதம் வந்த குஷியில் சென்ற காம கொடூரன்., பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழிக்க முதலிரவுக்கு தயாரானது போல வந்துள்ளான். இவனை புலந்து கட்டுவதற்கு காத்திருந்த பெண்கள் வீட்டின் வாயிலில் வந்ததும் ஓட ஓட விட்டு விரட்டி எடுத்துள்ளனர். இந்த தகவலை அறிந்த அப்பகுதி இளைஞர்களும் ஒன்று சேர்ந்து காம கொடூரனை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இவனை நடு ரோட்டில் போட்டு புலந்து கட்டியதை அடுத்து., வெறிதீர அடித்து ஆத்திரத்தை தீர்த்துக்கொண்ட மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவனை அழைத்து சென்றதாக மட்டும் கூறப்படுகிறது. மேலும்., இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு விசாரணை கூட மேற்கொள்ளவிலை என்று தகவல் தெரியவருகிறது.