18 வயது யுவதி – 8 வயது சிறுவன் வெட்டிக்கொலை

வென்னப்புவ, வைக்கால பகுதியில் இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த நபர்களின் வீட்டில் இருந்து வெளியேறும் நீர், தாக்குதலை மேற்கொண்ட நபரின் வீட்டு தோட்டத்திற்கு வருவதனால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 19 வயதுடைய யுவதி ஒருவரும் 8 வயதுடைய சிறுவன் ஒருவருமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

28 வயதுடைய சந்தேக நபர் பொலிஸில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.