மறைக்கப்பட்ட கவின், லாஸ்லியா ரகசியம்!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 ,60 நாட்கள் முடிவடைந்து மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் 8 போட்டியாளர்கள் கடந்த வாரங்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

மூன்று சீசனிலும் காதல், சண்டை, சர்ச்சை, வாக்குவாதம் இவை அனைத்தும் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் கவின், லாஸ்லியா, சாக்‌ஷி என மூன்று பேரின் காதல் கதை அரங்கேறியது. இதனை தொடர்ந்து அபிராமி, முகேன் காதல் கதைஅரங்கேறியது.

இந்நிலையில் கடந்த வாரங்களில் அபிராமி மற்றும் சாக்‌ஷி வீட்டை விட்டு வெளியேறினர். தற்போது லாஸ்லியா மற்றும் கவின் ஜோடிகள் மட்டுமே உள்ளே உள்ளனர். தற்போது சாக்‌ஷி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பல கேள்விகளையும், பிக்பாஸ் வீட்டில் கவின் தன்னிடம் பேசிய பல ரகசியங்களையும் தெரிவித்துள்ளார்.