வாஜ்பாய் இடத்தை பிடித்த அமித்ஷா!!

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வசித்துவந்த அரசு பங்களாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியேறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மத்திய டெல்லி பகுதியில் உள்ள கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் அவருக்கென வழங்கப்பட்ட அரசு பங்களாவில் வசித்துவந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் காலமானார். இதையடுத்து அந்த பங்களாவானது கடந்த ஆண்டு காலி செய்யப்பட்டது, இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு வாஜ்பாய் வசித்துவந்த அரசு பங்களாவை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில், அமித்ஷா குடியேறவுள்ள அந்த வீட்டில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கிரக பிரவேச நிகழ்வும் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது அமித்ஷா அங்கு குடியேறியுள்ளார். முன்னதாக டெல்லி அக்பர் சாலையில் அமைந்துள்ள பங்களாவில் அமித்ஷா வசித்துவந்தது குறிப்பிடத்தக்கது.