காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 பிரிவுவை ரத்து செய்து மத்திய அரசு கடந்த 5 ஆம் தேதி ரத்து செய்தது. இதையடுத்து, காஷ்மீரின் 370 பிரிவுவை இந்திய ரத்து செய்ததை ஐநா சபையில் கொண்டுவந்து சர்வதேச பிரச்சனையாக்க முன்னெடுக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு சீனா மட்டுமே ஆதரவளித்த நிலையில் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன.
இதையடுத்து, இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான் எல்லையைப் பயன்படுத்துவதில் தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தானின் அறிவியில் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபவாத் ஹூசைன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் எடுத்த முடிவால் ஆப்கானிஸ்தானுடனான இந்திய வர்த்தகத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.