இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவார். 41 வயதாகும் இவர் இந்திய அணிக்காக இரண்டு டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ரமேஷ் பவார் தற்போது இந்திய ‘ஏ’ அணியின் பவுலிங் கோச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் இந்திய சீனியர் பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்த இவர், சீனியர் வீரர்களுடன் ஏற்பட்ட மோதலால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
தற்போது இந்திய ‘ஏ’ அணியின் ஆண்கள் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி இந்தியா வந்து ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அந்தசமயத்தில் ரமேஷ் பவார் பயிற்சியாளராக பொறுப்பேற்பார்