இரு ரயில்கள் நேர்க்குநேர் மோதி விபத்து!!!

கொழும்பில் இரண்டு ரயில்கள்  நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம்  ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.

மருதானை மற்றும் கொழும்பு கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக பணிகள் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லையென ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

மேலும் விபத்தின் காரணமாக ரயில் சேவையில் தாமதம்  ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.