விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த நபர் கைது!!!

தமிழீழ  விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் நபரொருவரை கைதுசெய்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தமிழீழ  விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்தமை தொடர்பில் கல்முனை பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில், முற்றாக அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள்  இயக்கத்தை மீள உருவாக்க முயற்சித்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.