யோகாவால் நேர்ந்த விபரீதம்..!

மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோவின் நியூவோ லியோன் மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் அலெக்ஸா தெரசா(23). இவர் கல்லூரியில் படிக்கும் மாணவி இவர் 6 வது தளத்தில் வசித்து வந்தார். சம்பவத்தன்று காலை அவர் வீட்டு பால்கனியில் யோகா பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் உடன் இருந்த தோழியிடம் விளையாட்டுக்காக நான் கடிமான யோகாவை செய்து காட்டுகிறேன் என்று சொல்லி, பால்கனியில் உள்ள கண்ணாடி விளிம்பை பிடித்துக்கொண்டு தலைகீழாக தொங்கினார்.

அவர் தோழியும் அதனை தடுக்காமல் தனது செல்போனில் யோகா செய்வதை புகைப்படம் எடுத்து கொண்டு இருந்தார். அலெக்ஸா சில வினாடிகள் தலைகீழாக தொங்கி கொண்டிருந்த நிலையில் திடிரென்று எதிர்பாராத விதமாக கால் பிடி நழுவி மேல் தளத்தில் இருந்து கீழே விழுந்தார்.

சுமார் 80 ஆதி உயரத்தில் இருந்து விழுந்த தெரசா, கடுமையாக காயம் ஏற்பட்டது. தெரசாவின் 2 கால்களும் முறிந்தது. மேலும் அவர் கைகள், முதுகு, இடுப்பு, தலை,உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

உயரத்தில் இருந்து விழுந்ததில் அவரது உடலில் 110 எலும்புகள் உடைந்து, உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விளையாட்டாக செய்த யோகாவினால் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். யோகா உடலை ஆரோக்யமாக வைத்திருப்பதற்கே அதை இப்படி விளையாட்டாக செய்து விபரீதம் தேடிக்கொள்ளாமல் இருந்தால் நல்லது என்பதை உணர்த்தும் வகையில் இந்த சம்பவம் திகழ்கிறது.