நேர்கொண்ட பார்வைக்குபின் நடந்த தகராறு..

நேர்கொண்ட பார்வை படத்திற்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில், ஆவேசம் அடைந்த நண்பர்கள் குழு ஒன்று நண்பனை வெட்டி கொலை செய்து எரித்துள்ளது.

திருச்சியை சேர்ந்த தமிழழகன் நேர்கொண்ட பார்வை படம் பார்க்க சென்று விட்டு வீடு திரும்பவில்லை. இந்நிலையில், பொலிசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வந்த பொலிசார். நண்பர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழழகனின் நண்பர்களான, காக்கா கார்த்திக், மணிகண்டன் மற்றும் ஆட்டோ ஜெகன் ஆகியோர் மது அருந்தும் போது, தமிழழகனை கொன்று தாங்கள் எரித்தாக உளறியுள்ளனர். இதை சுற்றி கவனித்து கொண்டிருந்தவர்கள், பொலிசாருக்கு தகவல் கொடுக்கவே விசாரணையில் இறங்கிய பொலிசார் மூவரையும் கைது செய்து விசாரித்தனர்.

கார்த்தி – தமிழழகன்

 

அப்போது, உண்மையயை ஒத்துக்கொண்ட மூவரும், நடந்ததை விளக்கி உள்ளனர். நேர்கொண்ட பார்வை படம் பார்க்க தழிழகனும் கார்த்திக்கும் இணைந்து சென்றுள்ளனர். அங்கு பிரபாகரன் என்பவருடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த தமிழழகன் பிபாகரனின் முதுகில் கத்தியால் குத்தி உள்ளான். இதனால் பொலிஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இதற்கு பயந்து கார்த்திக் மற்றும் தமிழழன் தலைமறைவாக இருந்துள்ளன.

இந்நிலையில் கார்த்திக், தமிழழகன், மணிகண்டன், ஜெகன் இணைந்து மது அருந்தியுள்ளன. அப்போது மணிகண்டன் தமிழழகனை பார்த்து பிரபாகரனை குத்திவிட்டு வந்துவிட்டாய் கத்தியால் வெட்டி கொலை செய்ய கூட உனக்கு தெரிவில்லை என்று கிண்டல் அடித்துள்ளான். இதனால், ஆத்திரம் அடைந்த தமிழழகன், மணிகண்டனை வெட்ட சென்றுள்ளான். இதனை பார்த்த மற்ற நண்பர்கள் இணைந்து தமிழழகனை தாக்கி உள்ளன. அதில் படுகாயம் அடைந்த தமிழழகன் பலியானான்.

பயந்துபோன நண்பர்கள் மூவரும் இணைந்து தமிழழகனின் உடலை எரித்துள்ளனர்.

திருச்சி பகுதியில் சில தினங்கள் மழை பொழிந்ததால், எரிந்த சாம்பல் தண்ணீரில் கலந்து வெளியேறி உள்ளது. பொலிசார் தற்போது கிடைத்த சிறு தடையங்களை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.