மணத்தக்காளி கீரையை அடிகடி உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண் விரைவில் விரைவில் குணமாகும்.
பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும்.
பாகற்காயை விட பாகற்பழம் சிறந்தது. இதனை சமைத்து உண்ண வயிற்றில் உள்ள கிருமிகளை அழிப்பது உடன் உடல் பலம் பெறும். மலத்தை இளக்கி வெளிப்படுத்துவதுடன் பித்தத்தை தணிக்கும்.
வாகை மரபிசினை பொடி செய்து பால் அல்லது வெண்ணெயில் கலந்து உட்கொண்டு வரலாம்.
தண்டு கீரையில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து உள்ளதால் உடல் குளிர்ச்சி அடைந்து மூல நோய் மற்றும் குடல் புண் ஆறும்.
புழுங்கல் அரிசிச் சோற்றில் வடிகஞ்சி வயிற்றுப்புண் உள்ளவர்கள் குடித்தால் நல்ல குணம் கிடைக்கும்.
துளசி இலை சாற்றில் மாசிக்காயை நன்கு அரைத்து அந்த விழுதை இருவேளை சாப்பிட்டு வரவும்.
சீந்தில்கொடி, சுக்கு ஆகியவற்றை சம அளவு எடுத்து நசுக்கி நீர்விட்டு காய்ச்சி குடித்து வரவும்.
மாவிலங்கம், நொச்சி, தழுதாழை இவற்றின் சாறு வகைக்கு 50 மில்லி எடுத்து அதில் 35 கிராம் பெருங்காயம் சேர்த்து காய்ச்சி குழம்பு பதம் வந்ததும் பத்திரப்படுத்தி அதில் ஒரு கிராம் அளவு எடுத்து இரு வேளை சாப்பிட்டு வர எல்லாவிதமான வயிற்று வலி அல்சர் மற்றும் குன்மம் குணமாகும்.
அத்தி மரப்பட்டை சாற்றுடன் சமஅளவு பசும்பால் சேர்த்து சிறிதளவு கற்கண்டு கூட்டி 100 மில்லி லிட்டர் அளவு குடித்து வர வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.
அத்தி இலையுடன் சம அளவு வேப்பிலை சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வரவும்.
மேல் கூறியவற்றை முறையாக செய்தல் கண்டிப்பாக அல்சர் விரைவில் குணமாகும்.