மாவனெல்ல நகரில் உள்ள தனியார் கல்வி நிலையங்களில் மாணவர்களிடம் பணம் பறித்த போதைப்பொருள் குழுவொன்றை பொலிசார் கைது செய்து, பின்னர் எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர்.
20 வயதுக்குட்பட்டவர்களை கொண்ட குறித்த குழுவினர், தனியார் கல்வி நிலையங்களில் மாணவர்களிடம் மிரட்டி கப்பம் பெற்று வந்துள்ளனர் .
அத்துடன் அவர்கள் மாணவிகளை பாலியல் சேட்டைகளிற்கும் உள்ளாக்கியுள்ளனர்.
இந்நிலையில் வெலிமமன, இஹல மவேல, ஹகுருகம்மன, தேஹிமாடுவ மற்றும் நிகாபிட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவனெல்லா பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.