சூனியத்தை எடுக்கிறேன் என சிறுமியை அலறித்துடிக்கவைத்த சம்பவம்.!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தை அடுத்துள்ள மலைவாழ் பகுதியை சார்ந்த சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கு தொடர்ச்சியாக உடல் நிலை சரியில்லாமல் போயுள்ளது. மேலும், அடிக்கடி தொடர் தலைவலியும் ஏற்பட்டு வந்துள்ளளது.

இதனையடுத்து சிறுமியின் தந்தை சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்தும், சிறுமிக்கு உடல் நலம் முன்னேற்றம் அடையாமல் இருந்துள்ளது. மேலும்., சிறுமியின் தந்தை கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருவதால், பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சென்று மகளின் உடல் நலத்தை முன்னேற்ற வழியில்லாமல் திகைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், மகளின் தொடர் உடல் நலக்குறைவிற்கு வேறு காரணம் இருக்கும் என்று எண்ணிய தந்தை, அங்குள்ள ரூபேஷ் என்ற மந்திரவாதியை சந்தித்து விஷயத்தை கூறியுள்ளார். இதனை கேட்ட மந்திரவாதி சிறுமிக்கு யாரேனும் சூனியம் வைத்திருக்கலாம் என்று கூறி, சூனியத்தை எடுக்கும் பட்சத்தில் உடல் நலம் சரியாகிவிடும் என்று கூறியுள்ளான்.

இதனை கேட்ட தந்தை சிறுமியை ருபேசிடம் அழைத்து சென்ற நிலையில், சிறுமியை கண்ட காம கொடூரன் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பூஜை செய்ய வேண்டும் என்று கூறி, அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இந்த சமயத்தில், சிறுமி அலறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி வாசிகள் காட்டிற்குள் விரைந்துள்ளனர்.

மந்திரவாதி என்ற பெயரில் காம கொடூரன் சிறுமியை சீரழிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், மந்திரவாதியை அடித்து நொறுக்கி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ருபேஸின் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது