இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்சன் கிடையாது என்ற போதிலும், அடுத்த வாரம் எப்படியாவது வனிதாவை வெளியேற்ற வேண்டும் என பார்வையாளர்கள் முடிவு செய்திருப்பது இணையதளத்தின் வாயிலாக தெரிகின்றது. பல்வேறு தரப்பினரும் வனிதாவின் மீது கொலை காண்டில் இருப்பது தெரிகிறது.
ஆனால், பிக்பாஸ் இந்த வாரம் விக்ஷன் இல்லை என கூறி தப்பித்தாலும், அடுத்த வாரம் வனிதாவை காப்பாற்ற போட்டிருக்கும் திட்டம் தான் கேப்டன் பதவி. இந்த வார டாஸ்க்கில் சிறப்பாக விளையாடி உள்ளதாக கூறி வனிதாவை அடுத்த வார கேப்டனாக நியமனம் செய்ய பிக்பாஸ் திட்டமிட்டுள்ளது.
பிக்பாஸ் வீட்டின் அடுத்த வார கேப்டன் இனத்தை வனிதா பிடித்து விட்டால், வீட்டில் உள்ள போட்டியார்கள் அவரை நாமினேட் செய்ய இயலாது, இதன் காரணமாக வனிதா தப்பித்துக்கொள்வார். அப்படி வனிதா தப்பிக்கும் பட்சத்தில் வெளியேறுவது யார் என்றார் கேள்வி தற்பொழுது தோன்றியுள்ளது.
கவின், தர்ஷன், சாண்டி, லாஸ்லியா மற்றும் சேரன் ஆகிய 5 பேரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து இப்போதைக்கு வெளியேற வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. எனவே, முகேன் அல்லது ஷெரின் தான் வெளியேற்றப்படுவார்கள் என தெரிகிறது. அடுத்தடுத்து வரும் வாரங்களில் வனிதாவை காப்பாற்ற என்னென்ன திட்டங்கள் போடப்படும் என்பது தெரியவில்லை.