நம்ம விஷயம் எல்லாருக்கும் தெரிந்துவிட்டது.. என்ன பண்ணலாம்?..கள்ளக்காதல் ஜோடியின் விபரீத முடிவு..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி பகுதியை அடுத்துள்ள ஊத்துக்குளி பகுதியை சார்ந்தவர் முத்துலட்சுமி (வயது 45). இவருக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள நிலையில்., முத்துலெட்சுமிக்கும் – பக்கத்து வீட்டில் வசித்து வந்த குமார் என்பவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே., இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். மேலும்., குமாருக்கு இதற்கு முன்னதாகவே திருமணம் முடிந்த நிலையில்., மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்த சமயத்தின் போது இருவரும் விவசாய பணிக்காக சுமார் 10 நாட்களுக்கு முன்னதாக தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் மதுக்கூர் பகுதியில் வந்து தங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் அங்கேயே தங்கி பணியாற்றி வந்த நிலையில்., இருவரும் இன்று அங்குள்ள அண்டமி பாலத்தின் அடியில் பிணமாக இருந்துள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி வாசிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில்., தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரேதத்தை பார்க்கையில்., இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து இருவரின் உடலை அங்குள்ள பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில்., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., இவர்களின் கள்ளக்காதல் தொடர்பானது இருவரின் குடும்பத்தாருக்கும் தெரியவரவே., இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.