2 வயது சிறுமியை தாயும் காதலுனும் சேர்த்து செய்த காரியம்..!

வேலூர் மாவட்டத்தில் அரியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனை பிரிந்து தாய் வீட்டில் தனது 2 வயது குழந்தையுடன் வசித்து வந்தார். குழந்தையை தாயிடம் விட்டுவிட்டு செல்போன் கடை ஒன்றுக்கு வேளைக்கு சென்றுள்ளார். அங்கே இருந்த இளைஞர் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி ஒன்றக சுற்றி திரிந்துள்ளார்.

இருவரும் ஒன்றாக திரிவதை அறிந்த தாய், தன் மகளை கண்டித்துள்ளார். இதையடுத்து தாயிடம் இருந்து பிரிந்து தனியாக வீடு எடுத்து வசிக்க தொடங்கி இருக்கிறார் அந்த பெண். மகள் தனியாக சென்ற சில மாதங்களில் தாய் இறந்துவிட்டதால், தாயிடம் இருந்த தனது 2 வயது மகளை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் சிறுமியின் வருகை, வீட்டிற்கு வந்து சென்ற காதலன் உதயகுமாருக்கு இடையூறாக இருந்துள்ளது. இதனால் காதலர்களுக்குள் சண்டை வந்துள்ளது. இதையடுத்து. இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை அந்த சிறுமி பார்த்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை என்று பாராமல் அதனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளனர்.

அந்த சிறுமியின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து துன்புறுத்திய காதலன் உதயகுமார், சிறுமி எழுந்து ஓடிவிடக்கூடாது என்பதற்காக பாதத்திலும் சூடுவைத்துள்ளான். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் குழந்தைகள் பாதுகப்பு மைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமிக்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் கொடுமையைக் கண்டு மிரண்டு போயிருக்கின்றனர். குழந்தையில் அனைத்து உறுப்புகளிலும் சூடுவைத்ததோடு காயங்கள் ரணமாகவே இருந்து குழந்தை உயிரிழக்க வேண்டும் என்பதற்காக, அந்த காயங்களை மரக்குச்சியால் கிளறி வைத்த கொடூரத்தையும் அவன் செய்திருப்பதாக காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.

சிறுமியின் தாயை உடனடியாக கைது செய்த காவல்துறையினர், தப்பிச்சென்ற உதயகுமாரை 2 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின்னர், போக்சோ சட்டத்தில் கைது செய்து உரிய விதத்தில் கவனித்தனர். குழந்தையிடம் அவர்கள் இருவரும் மிககொடூரமாக நடந்து கொண்டதால் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தை வரம் வேண்டி தவிக்கும் எத்தனையோ பெண்கள் மத்தியில் கள்ள காதலனுடன் சேர்ந்து பெற்ற பிள்ளையை சிகரெட்டால் உடல் முழுவதும் சூடு போட்டு கொள்ள நினைத்த கல் நெஞ்சம் கொண்ட இவள் தாய்மையின் களங்கம்.