ஆட்டோவில் இருந்து இறங்கிய தாய் செய்த காரியம்..!

வளர்ந்து வரும் காலகட்டத்தில் செல்போன் அத்தியாவசியமான தேவைகளுள் முதன்மை இடத்தில் இருக்கிறது. அனைத்து வேலைகளும் செல்போனில் அடங்கி உள்ளதால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தும் பொருளாக இருக்கிறது. செல்போனால் நன்மைகள் என்று இருந்தாலும், அதன் விளைவுகளும் அதிகமாகவே இருக்கிறது அதன் அடிப்படியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

வடமாநிலத்தை சேர்த்த பெண் தன் குழந்தையுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் கைபேசியில் அவர் போக வேண்டிய இடத்துக்கு வழி விசாரித்த படியே சென்றுள்ளார். இறங்க வேண்டிய இடம் வந்த பிறகு இறங்கிய அவர் தன் குழந்தையை மறந்துவிட்டு பேசிபடியே சென்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர், குழந்தையை தூக்கி கொண்டு ஓடிச்சென்று பெண்ணிடம் கொடுத்துள்ளார்.

அதன்பின் தான் அவர் குழந்தையை விட்டுவந்ததை கவனித்திருக்கிறார். பெற்ற குழந்தையை மறந்து தாயின் உணர்ச்சியை பறக்க விட்ட இந்த சம்பவத்திற்கு காரணமானது அந்த கைபேசி தான். செல்போன் தேவை தான் அதற்காக அதர்க்குள்ளையே மூழ்கி கிடப்பது என்பது இந்த மாதிரி சம்பவங்கள் நடக்க தான் செய்யும்.

இந்த புகைப்படம் பார்ப்பதற்கு எதோ நாடகம் போன்று இருந்தாலும், இந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கும் விதமாகவே இருக்கிறது.