மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் மும்பைகுர்லா மேற்கு வினோபாவே நகரை சார்ந்தவர் தீபக். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் அனுஜா (25). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 3 வயதுடைய ஸ்ரீ என்னும் மகன் இருக்கிறார்.
தீபக்கின் மனைவி மும்பையில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம் போல காலையில் பணிக்கு சென்ற இவர்., மீண்டும் மாலை சுமார் 6 மணியளவில் இல்லத்திற்கு திரும்பினார்.
வீட்டிற்கு திரும்பிய கணவர் வீட்டின் கதவு உள்பக்கமாக தாளிட்டிருப்பதை கண்டார். வெகு நேரமாக கதவுக்கு அருகில் காத்திருந்த இவர் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்கத்தால் சந்தேகமடைந்தார். அந்த சமயத்தில் வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்துள்ளார்.
அந்த நேரத்தில், அனுஜா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியுடந்தார். மேலும், அவரது 3 வயது குழந்தை ஸ்ரீ படுக்கையறையில் பேச்சு மூச்சு இன்றி கிடந்துள்ளார். இதனை பார்த்து கதறிய இவரின் அலறலை கேட்டு அதிர்ச்சியுடன் அக்கம் பக்கத்தினர் விரைந்தனர்.
இவரிடம் விசயத்தை கேட்டறிந்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உடனடியாக இருவரையும் மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவமனையில் இவர்கள் இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில், குழந்தை ஸ்ரீயின் கழுத்தை நெரித்து கொலை செய்த அனுஜா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.