இலங்கையில் இருக்கும் பதுளை மாவட்டத்தில் உள்ள ஹாலிஎல பள்ளியில் 11 மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.
மேலும்., இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஆசிரியர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில்., இந்த தகவல் வெளியாகியுள்ளது.
காவல் துறையினர் ஆசிரியரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில்., அவரது வயது 44 என்பதும்., பள்ளியில் பயின்று வந்த 5 மாணவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக ஏற்கனவே புகார் வந்திருந்த நிலையில்., ஆசிரியரின் கைதுக்கு பின்னர் மொத்தம் 11 வழக்குகள் பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்த காவல் துறையினர்., கைது செய்யப்பட்ட ஆசிரியரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் முடிவு செய்து தேவையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது வெளிவந்து பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.