நண்பர்களின் உல்லாசத்திற்கு ஒத்துழைக்காத மனைவியை கொடூர கொலை செய்த கணவன்.!

சென்னையில் உள்ள பெருங்குடியை அடுத்துள்ள கல்லுக்குட்டை பகுதியை சார்ந்தவர் உதயகுமார். இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் மணிமேகலை (வயது 25). இவர்கள் இருவருக்கும் இரண்டு வயதுடைய ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் நான்கு வருடங்களாக கல்லுக்குட்டை பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில்., உதயகுமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால்., தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் வழக்கத்தை வைத்துள்ளான். மேலும்., வீட்டிற்கு தனது நண்பர்களை அழைத்து வந்து., மது அருந்தும் வழக்கத்தையும் வைத்துள்ளான். இந்த செயலை கவனித்து ஆத்திரமடைந்த மணிமேகலைக்கும் – உதயகுமாருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த தருணத்தில்., நேற்று இரவு நேரத்தில் உதயகுமார் தனது நண்பர்களுடன் வீட்டு வாசலில் வைத்து மது அருந்திக்கொண்டு இருந்த நிலையில்., ஆத்திரமடைந்த மணிமேகலை அவரது நண்பர்களை திட்டிவிட்டு கணவரை வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்குள் சென்ற மணிமேகலை உடைமாற்றிக்கொண்டு இருந்த சமயத்தில்., உதயகுமாரின் நண்பனான மாணிக்கவேல் என்பவன் வீட்டிற்குள் நுழைந்துள்ளான்.

இதனை கண்ட மணிமேகலை மாணிக்கவேலை திட்டவே., இதனை கேட்டு ஆத்திரமடைந்த மாணிக்கவேல் மணிமேகலையை அவதூறாக பேசியுள்ளான். இதனால் மனமுடைந்து போன மணிமேகலை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரின் புகாரை அறிந்துகொண்ட உதயகுமார்., ஆத்திரமடைந்து “அனைவரும் எனது நண்பர்கள்., அவரின் விருப்பத்திற்கு நீ இணங்க வேண்டும்” கூறியுள்ளான். இல்லையேல் வீட்டில் இருந்து வெளியேற கூறி சண்டையிட்டுள்ளான்.

புகாரை திரும்ப பெற மணிமேகலை ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்தால்., ஆத்திரமடைந்த உதயகுமார் மணிமேகலையின் கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் சரமாரியாக கத்தியால் குத்தி சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடியுள்ளான். மணிமேகலையின் அலறலை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் நுழைந்த சமயத்தில் மணிமேகலை இரத்த வெள்ளத்தில் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து அவசர ஊர்தியினருக்கும் – காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்ததை அடுத்து., சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மணிமேகலையை சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மணிமேகலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த துரைப்பாக்கம் காவல் துறையினர் தலைமறைவான உதயகுமார் மற்றும் அவனது நண்பர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.