தலையில் விழுந்த போத்தலால் உயிரிழந்த முதியவர்!!!

மேல் மாடியிலிருந்து தூக்கி எறியப்பட்ட கண்ணாடி போத்தலால் தலையில் அடிபட்டு உயிரிழந்த 74 வயது முதியவரின் வழக்கில் ஆஸ்திரேலிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆண்ட்ரூ கோஸ்லிங் எனும் அந்த ஆடவரர் மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும்.

ஆகஸ்ட் 18ஆத் தேதி அன்று திரு நசியாரி சுனி, தஞ்சோங் பகார் வட்டாரத்திலுள்ள ‘ஸ்போட்டிஸ்ஊட் 18’ என்ற 35 மாடி கூட்டுரிமை வீட்டில் நடந்த புதுமனை புகுவிழாவுக்காகச் சென்றபோது இந்தச் சம்பவம் ஏற்பட்டது. வெளிப்புறத்து மேசைக்கருகே அமர்ந்து சாப்பிடவிருந்த திரு நசியாரி மீது கண்ணாடி போத்தல் திடீரென விழுந்ததாக அவரது இரண்டு மூத்த பிள்ளைகள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் அவரது இறுதிச் சடங்கின்போது தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் அவரது மனைவியும் உறவினர்களும் அருகில் இருந்ததாகக் கூறப்படுகிறது. திரு நசியாரி உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மறுநாள் காலையில் அவர் உயிர் இழந்தார். இம்மாதம் 20ஆம் தேதி திரு நசியாரியின் நல்லுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இச்சமபவத்தைத் தொடர்ந்து ‘ஸ்போட்டிஸ்ஊட் 18’ குடியிருப்பாளர்களிடம் விசாரணை நடத்தினர். மேல் மாடியிலிருந்து திரு நசியாரியின் தலையில் விழுந்தது ஒர் இத்தாலிய வைன் போத்தால்.

உயர் மாடியிலிருந்து குப்பை கொட்டியதற்காகக் கடந்த ஆண்டு 1,200க்கும் மேற்பட்டவர்கள் மீது தேசிய சுற்றுப்புற ஆணையம் நடவடிக்கை எடுத்தது. மாடியிலிருந்து அடிக்கடி குப்பைகள் வீசப்படும் 1,000க்கும் அதிகமான இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டன.