சொத்துக்களை பிரித்து கொடுக்கும் அமிதாப் பச்சன்!!

நடிகர் அமிதாப் பச்சன் தற்போதும் சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என பிசியாக இருக்கிறார். இதற்காக அவர் பல கோடிகள் சம்பளமாகவும் பெற்று வருகிறார். அமிதாப் பச்சனுக்கு அபிஷேக் பச்சன் என்ற மகன், ஸ்வேதா பச்சன் என்ற மகளும் உள்ளனர்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமிதாப் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய மகன் மற்றும் மகள் இருவருக்கும் சரி சமமாக பிரித்து தரவுள்ளதாக கூறியுள்ளார். அமிதாப் பச்சனுக்கு சுமார் 400 மில்லியன் அமெரிக்கா டாலர் சொத்து உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2800 கோடிக்கும் மேல் அவருக்கு சொத்துக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.