எஸ்.பி , டிலான் பெரேரா மகிந்தவிடம் ஓட்டம்!!!

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர்களாக இருந்த எஸ்.பி.திசநாயக்கவும், டிலான் பெரேராவும் இன்று மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவிடம் இருந்து கட்சியின் உறுப்புரிமை அட்டைகளைப் பெற்றுக் கொண்டனர்.

கடந்த 11ஆம் நாள் நடந்த பொதுஜன பெரமுனவின் மாநாட்டில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பங்கேற்ற எஸ்.பி.திசநாயக்க , சுதந்திர கட்சி பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். டிலான் பெரேராவும் மத்திய குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்தே அவர்கள் இன்று பொதுஜன பெரமுனவில் இணைந்தனர்.