வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் என மூன்று நாடுகளில் மொத்தமாக 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். நேற்று, காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் இங்கிலாந்து தலைநகரான லண்டன் சென்றுள்ளார்.
நேற்று மாலை லண்டனை அடைந்த அவர் அங்குள்ள வெளிநாடு வாழ் தமிழர்கள் வரவேற்க அசந்து போய்விட்டார். அவர்கள் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் உற்சாகமான வரவேற்பு அளித்துள்ளனர். அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரின் செயலாளர் விஜயகுமார், சாய்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் உடன் சென்றனர்.
வருகின்ற ஒன்றாம் தேதி வரை லண்டனில் தங்கியிருக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அங்கு இருக்கும் சில மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ பணியாளர் திறன் குறித்து நேரில் பார்வையிட இருக்கின்றார். கிங்ஸ் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கின்றார்.
விரைவில் தமிழக அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆம்புலன்ஸ் விமானம் வழங்கும் திட்டம் குறித்தும், அங்குள்ள நிறுவனத்திடம் பேசி இருக்கின்றார். மேலும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு பெரிய தொழில் நிறுவன அதிபர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.