இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கெண்டபரி பேராயர் அதி வண. ஜஸ்டின் வெல்பி ஆண்டகை நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
இதன்போது அவர் , சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக ஜனாதிபதி அவர்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை பாராட்டியுள்ளார்.
மிகுந்த மரியாதையுடன் பேராயரை வரவேற்ற ஜனாதிபதி, இலங்கைக்கான அவரின் விஜயம் நாட்டுக்கு ஆசீர்வாதமாகுமென குறிப்பிட்டதோடு, அவரது வருகைக்கு தமது நன்றிகளையும் தெரிவித்தார்.
மேலும் பேராயருடன் மிக நெருங்கிய சுமூக கலந்துரையாடலில் ஜனாதிபதி ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் , நாட்டின் அனைத்து மதத்தினரிடையேயும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை கட்டியெழுப்பி அனைத்து மதத்தினரின் வரப்பிரசாதங்களையும் உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களிற்கு பேராயர் பாராட்ட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
சுமூக கலந்துரையாடலைத் தொடர்ந்து அதி வண. ஜஸ்டின் வெல்பி ஆண்டகை ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் வழங்கியதுடன், சந்திப்பை அடையாளப்படுத்தும் வகையில் நினைவுப் பரிசில்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.