பிரான்சில் தபால் அட்டை ஒன்று 26 ஆண்டுகள் கழித்து சரியான முகவரியை சென்றடைந்த சம்பவம் நடந்துள்ளது.
Vieux-Boucau(Landes) நகரில் வசிக்கும் Quitterie Darriau என்ற பெண்ணுக்கு தபால் அட்டை ஒன்று வந்து சேர்ந்தது. தனது தபால் பெட்டியை திறந்து பார்த்த அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
குறித்த தபால் அட்டையானது, கடந்த 1993ஆம் ஆண்டு Nancy நகரில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது. அந்த ஆண்டு ஆகத்து 6ஆம் திகதி அனுப்பப்பட்ட அந்த தபால் அட்டை, 26 ஆண்டுகள் கழித்து வந்து சேர்ந்துள்ளது.
இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், குறித்த தபால் அட்டை புதிதாகவே எந்தவித சேதமும் அடையாமல் இருந்தது தான்.
வீட்டின் முகவரில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, சரியான முகவரியை வந்து சேர இந்த தாமதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.