பேரதிர்ச்சியை வெளியாகும் உண்மை…….. தோண்ட தோண்ட குழந்தைகளின் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட எலும்பு குவியல்கள்.!

பெரு நாட்டில் இருக்கும் பெருவின் தலைநகரான லிமாவின் வடக்கு கடற்கரை பகுதியில் பலியிடும் பீடமானது இருக்கிறது. இந்த பீடத்திற்கு அருகிலேயே சுமார் 227 குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.

2018 ஆம் வருட ஜூன் மாதத்தின் போது., இந்த கடற்கரைக்கு அருகில் இருக்கும் பம்பா-லா-க்ரூஸ் நகருக்கு சுற்று பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சமயத்தில்., அதிர்ச்சிதரும் விஷயமாக எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த எலும்புக்கூடுகளை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்த சமயத்தில் 56 குழந்தைகளின் உடல் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததை அடுத்து., சுமார் 140 குழந்தைகளின் உடல்கள் மற்றும் 200 ஒட்டகங்களின் எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த செய்தி வெளியாகி பெரும் அதிர்ச்சியையும்., அதிர்வலையையும் ஏற்படுத்திய நிலையில்., கடற்கரை பீடத்தில் பலியிடப்பட்டுள்ள 227 குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டய்யப்பட்டுள்ளது. இந்த பலியிடுதல் குறித்து “கடவுள்களை கவுரவிக்கவும்., உலகின் எல்-நியோ விளைவு நடைபெறாமல் இருக்கவும்., இயற்கையை சமாதானம் செய்யும் நோக்கில்., 4 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் பலியிடப்பட்டுள்ளதாக” ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.