இனிமே அப்டி பண்ணுவியா’… ‘கணவரும், மனைவியும் சேர்ந்து’… வீடியோ!

தன்னிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை, பெண் ஒருவர், தனது கணவருடன் மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒருகட்டத்தில் தொந்தரவுகளை பொறுத்துக்கொள்ள முடியாத அந்தப் பெண் நடந்தவற்றை அவரது கணவரிடம் கூறியுள்ளார்.

தம் கண் முன்னே மனைவியிடம் அந்த இளைஞர் தவறாக நடக்க முயன்றதை கண்ட அந்தப் பெண்ணின் கணவர், அந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்தார்.

பின்னர் தனது ஷூவை மனைவிடம் கொடுத்து அந்த இளைஞரை தாக்குமாறு மனைவிடம் கேட்டுக்கொண்டார். மனைவி சரமாரியாகத் தாக்கும் காட்சிகளை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் ஆத்திரம் தீரும் வரை இளைஞரை ஷுவால் அடித்தும், நீட்ணட குச்சியால் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காவல்துறையினர் வரும் வரை கட்டி வைத்து அடித்த அந்தப் பெண்ணும் அவரது கணவரும், பின் அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த வீடியோ ‘டிவி 9’ செய்தியில் இணைக்கப்பட்டுள்ளது.