பாகிஸ்தான் அமைச்சருக்கு ஏற்பட்ட விபரீதம்!

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பாகிஸ்தான் முழுக்க, நேற்று அனுதாபம் அனுசரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற பேரணி ஒன்றில், பாகிஸ்தான் மத்திய ரயில்வே அமைச்சர் ஷெய்க் ரஷித் அகமது பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது அவர், மோடியை கண்டித்து பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென கையில் வைத்திருந்த மைக்கில் மின்சாரம் பாய்ந்து, அமைச்சருக்கு ஷாக் அடித்தது. இதனால் சில நிமிடங்கள் அவர் நிலைகுலைந்து போனார். அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட அமைச்சர் ஷெய்க், இது மின்சார கோளாறு, மோடியால் பாகிஸ்தானை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.