இதற்காகத்தான் 18 வயது யுவதியையும் சிறுவனையும் கொன்றேன் – கொலையாளியின் வாக்குமூலம்!

வென்னப்புவ வைக்பல பகுதியில் கழிவுநீர் பிரச்சனையால் 18 வயது யுவதியையும், அவரது 8 வயது சகோதரனையும் வெட்டிக் கொன்ற நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் குறித்த சந்தேக நபர் மாரவில நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, ஒப்புதல் வாக்குமூலமளித்தார்.

இதன்போது யுவதியையும் சிறுவனையும் ஆத்திரத்தால் தாம் கொலை புரிந்ததாக அவர் வாக்குமூலமளித்துள்ளார்.

தனது மனைவிக்கு சொந்தமான நிலத்தை விற்று, சிற்றுண்டிச்சாலையை ஆரம்பித்ததாகவும், எனினும் அயல்வீட்டார் அதற்கு இடையூறு ஏற்படுத்தி வந்ததாகவும் சந்தேகநபரான இஷான் சுதீபாஷ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பிரதேசசபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் மூலம் எனது தொழிலை நிறுத்த அவர்கள் கடிதம் அனுப்பினார்கள். என்னால் தொழிலை நிறுத்த முடியாது. மனைவியின் காணியை விற்று தொழிலை ஆரம்பித்திருந்தேன். இந்த விவகாரத்தால் கடந்த இரண்டு நாட்களாக தன் மனைவி, மற்றும் தாயார் மிகுந்த குழப்பத்தில் உள்ளதாகவும் சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர்கள் ஜேவிபியின் உள்ளூர் பிரமுகர்களிடம் முறையிட்டதோடு,தன்னை அங்கிருந்த அகற்றுவதிலேயே அவர்கள் குறியாக இருந்ததால் தான் அவர்களை கொலைசெய்ததாக சந்தேக நபர் நீதிமன்றில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.