கவுன்டிங் ஸ்டார் சந்தானம் மூன்று வேடத்தில் .!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நாயகனாக அறிமுகமான சந்தானம் தற்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றார். நகைச்சுவையை அடிப்படியாக கொண்ட பல படங்களில் நடித்து ஹிட் அடித்து வருகின்றார்.

இவர் நடித்த ‘தில்லுக்கு துட்டு’, ‘சக்க போடு போடு ராஜா’ மற்றும் ‘தில்லுக்கு துட்டு 2’ உள்ளிட்ட பல்வேறு படங்கலில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான ‘ஏ1’ என்ற காதல் கலந்த காமெடி திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஷங்கரின் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் தான் ‘டகால்டி’. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.

இந்த நிலையில், சந்தானத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பானது வெளியாகி இருக்கின்றது. கார்த்திக் யோகி இயக்கத்தில், உருவாகி வரும் புதிய திரைபடத்தில் சந்தானம் மூன்று வேடங்களில், நடிக்க இருக்கின்றார்.

இந்த படத்தை சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் மற்றும் கேஜேஆர் ஸ்டூடியோசும் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் டைட்டில் லுக் போஸ்டர் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியிட இருக்கின்றனர்.