பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 ,68 நாட்கள் முடிவடைந்து மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் 8 போட்டியாளர்கள் கடந்த வாரங்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
மக்களை இந்நிகழ்ச்சி அதிகமாக கவர்ந்துள்ளது. மேலும் கவின், லாஸ்லியா காதல் தொடர்ந்து வருகிறது.மேலும் அவர் லாஸ்லியாவுடன் நெருங்கிப்பழகி வந்த நிலையில், கமலே இதனை சுட்டிக்காட்டி அவர்களுக்கு அறிவுரை வழங்கும் அளவிற்கு விவகாரம் பெரிதானது.
இவ்வாறு கவின் காதலில் ஜாலியாக இருக்கும் நிலையில், சீட்டு கம்பெனி நடத்தி 34 பேரிடம் 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயை பண மோசடி செய்ததாக கவின் தாயார் ராஜலட்சுமி, அவரது மருமகள் ராணி, மேலும் தமயந்தி, அருணகிரி, சொர்ணராஜன் ஆகியோர் மீது 2007 -ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டு கவின் தாயார் உட்பட 3 பெண்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் பிக்பாஸ் வீட்டிலிருந்து கவின் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், சாஹோ திரைப்படம் குறித்து, விமர்சனைத்தை யுடியூப் சேனல் ஒன்று தியேட்டரில் எடுத்த போது கருத்து தெரிவித்த ஒருவர் அச்சு அசலாக, அப்படியே கவின் போலவே இருந்தார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த பலரும் கவின் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதுதான் ஆதாரம் என பதிவு செய்துவருகின்றனர்.