உலகம் முழுதும் பெண்களுக்கு எதிரான அநியாயங்கள் பல நடைபெற்று கொண்டு இருக்கின்றது. பல பள்ளி, கல்லூரி, அலுவலகம் என பெண்கள் வெளியிலும், வீட்டில் இருக்கும் உறவினர்களாலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்.
அந்த வகையில், காதல் என்ற போர்வையில், திருமண ஆசை காட்டி உல்லாசம் அனுபவித்துவிட்டு கழட்டிவிடும் ஆண்களும், அதனை படம்பிடித்து வைத்து பணம் கறக்கும் ஆண்களும், என பெரிய கும்பலே பெண்களுக்கு எதிரான குற்றங்களை புரிய இருக்கின்றது.
அதுபோல தான் ஈரோடு அருகே 12 ஆண்டுகளாக காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ள ஒருநபரின் மீது நடவடிக்கை கோரி, பெண்ணின் உறவினர்கள் ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
அங்கே அவர்கள், “கூட்டுறவு துறை தணிக்கை அலுவலரான மணி என்பவர் அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.” என கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக கூறியுள்ளனர். இதன் காரணமாக அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.