நாம் வாழும் உலகில் மக்கள் தங்களின் உயிரை பல முறையில் பரிதாபமாக இழந்து வருகின்றனர். வாகனங்களில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி பலர் தங்களின் உயிர் மற்றும் உடமைகளை இழந்து., குடும்ப உறுப்பினர்களையும் இழந்து துடிதுடித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் நொடிப்பொழுதில் பல்வேறு விபத்துகள் நிகழ்வதாக ஆய்வறிக்கைகள் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ணியில்., பாகிஸ்தான் நாட்டில் பயணிகள் பேருந்து விபத்திற்குள்ளாகி., 24 பேர் பரிதாபமாக உயிரிழந்ததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் சுமார் 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்தானது புறப்பட்டு சென்றது. இந்த பேருந்து இரவு நேரத்தில் பயணம் செய்து கொண்டு இருந்த சமயத்தில்., பக்ரா என்ற பகுதிக்கு அருகே சென்று கொண்டு இருந்தது.
இந்த சமயத்தில்., ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தானது., எதிர்பாராத விதமாக அங்கிருக்கும் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனையடுத்து பேருந்தில் பயணித்த மக்கள் வலியால் அலறித்துடித்த நிலையில்., இது குறித்து சக வாகன ஓட்டிகள் காவல் துறையினருக்கும்., அவசர ஊர்தியினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள்., பேருந்தில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 24 பேரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., படுகாயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.