வெளிநாடுகளில் உணவகங்களில் ஜன்னல் வழியாக உணவை ஆர்டர் செய்வது சகஜம். அப்படியிருக்கும் நிலையில், வாய் பேச இயலாத ஒரு பெண்ணின் ஆர்டரை ஏற்க மறுத்து, அவரை அவமதித்த ஹொட்டல் ஊழியர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
வெளியாகியுள்ள வீடியோவில் இரண்டு மகன்களுக்குத் தாயாகிய Rachel Hollis (38) உணவக ஜன்னல் வழியாக ஆர்டர் செய்ய, அதாவது அவரால் வாய் பேச முடியாது என்பதால், தனக்கு என்ன வேண்டும் என்பதை தனது போனில் டைப் செய்து காட்டுகிறார்.
பதிலுக்கு அந்த ஊழியர் உணவை கொடுக்காமல், ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார். அதில், உங்கள் ஆர்டரை ஜன்னல் வழியாக கொடுக்க முடியாது, நீங்கள் உள்ளே வர வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.
மீண்டும் மீண்டும் தன் நிலைமையை விளக்க முயன்றும் அந்த நபர் கேட்காமல் போகவே, நடப்பதை வீடியோவாக தனது மொபைலில் பதிவு செய்ய முடிவு செய்துள்ளார் Rachel.
அப்போது அவர் அங்கிருந்து நகராமல் இருப்பதைக் கண்ட அந்த ஊழியர் மீண்டும் ஜன்னலைத் திறந்து, தன்னால் அவரது ஆர்டரை கொடுக்க முடியாது என்று கூறுவதோடு, முகத்தில் அறைந்தாற்போல் ஜன்னலை அடித்து சாத்தி விட்டுப் போகிறார்.
அவர் உங்கள் குறைபாட்டுக்கெல்லாம் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது, எனக்கும்தான் குறைபாடு இருக்கிறது என்றும் கூறி, தன் பிள்ளைகள் முன் தன்னை அப்படி நடத்தியது தன்னை மிகவும் பாதித்ததாக தெரிவிக்கும் Rachel, உணவக ஊழியர்கள் பொலிசாரிடம் புகாரளித்தாக தெரிவிக்கிறார்.
ஆனால், வந்த பொலிசார் Rachelஐ எந்த கேள்வியும் கேட்கவில்லை. அதற்கு பதிலாக அந்த ஊழியர் மீது உணவக தலைமை அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதோடு, அந்த கிளை உணவகத்தில் பணி புரியும் அனைவருக்கும் வாடிக்கையாளர்களிடம் எப்படி மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என கற்றுக் கொடுக்கும் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் பர்கர் கிங் என்ற அந்த உணவகத் தலைமை அலுவலகம் Rachelஇடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளது.