ஆண்கள் வெறுக்கும் பெண்களின் அழுகை..!!

அழுகை என்பது நம் இயலாமையின் காரணமாக வெளிப்படுவது. பெரும்பாலும் சோகம், துக்கம், கவலை போன்றவை ஏற்படும் தருணங்களில் கண்களில் கண்ணீர் தானாக சுரந்து விடும். அழுகை என்றால் முதலில் சுட்டிக் காட்டப்படுவது பெண்கள் தான். அவர்களால் எதையும் மனதில் வைத்து கொள்ள முடியாது. உடனே அழுகை ஏற்பட்டு அழுதுவிடுவார்கள். சின்ன சின்ன பிரச்சனைகளில் கூட வெளிப்படுவது அழுகை தான். பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுகிறார்கள் என்பது ஆண்கள் பொதுவாக வைக்கும் புகாராகவும் உள்ளது.

சில இடங்களில் விதி விலக்காக, பெண்களால் ஆண்கள் அழுகிற சம்பவங்களும் நடைபெறுகிறது, அது வேறு விஷயம். ஆனால் பெண்கள் அழும்போது அதை ஆண்கள் வெறுக்கிறார்கள். அழுதே காரியத்தை சாதித்து விடுகிறார்கள் என்றும் எரிச்சல்படுகிறார்கள். மேலும் தங்களுக்கு ஏதாவது காரியம் சாதிக்க வேண்டுமானால், கையில் ஒரு துணியுடன் கிளம்பி விடுகிறார்கள் பெண்கள் என்பது ஆண்களின் குற்றச்சாட்டு. இங்கு பெண்களின் அழுகையை ஆண்கள் வெறுப்பதற்கான காரணத்தை பார்க்கலாம்.

எரிச்சல்
ஒரு பெண் அழத் தொடங்கி விட்டால், ஆண்களால் எதையும் செய்ய முடியாமல் மனதை வருந்த செய்கிறதாம். எப்படி இந்த அழுகையை சமாளித்து சமாதானப்படுத்துவது என்பதில் அவர்களுக்குக் குழப்பம் ஏற்படுகிறதாம். சமாதானப்படுத்த முயன்றால் அழுகை கூடுமாம், அவர்கள் கேட்பதை நிறைவேற்றுவதாக அல்லது கவனிப்பதாக உறுதியளித்தால் மட்டுமே அழுகை குறைகிறதாம். இது சமயத்தில் ஆண்களுக்கு எரிச்சலைக் கொடுக்கிறதாம்.

பொது இடங்கள்
வெளியிடங்கள், கடை போன்றவற்றுக்குச் செல்லும்போது தான் கேட்டதை அல்லது விரும்பியதை வாங்கித் தராமல் போகும் ஆண்களிடம், காரியம் சாதிக்க பல பெண்கள் பொது இடம் என்றும் பார்க்காமல் அழுகிறார்களாம். அப்போது ஆண்களுக்கு பெரும் தர்மசங்கடமாகி விடுகிறதாம். பொது இடத்தில் தான் ஒரு சிறந்த மனிதராக நடந்து கொள்ளத்தான் ஒவ்வொரு ஆணும் விரும்புவார்கலாம். எனவே இதைப் பயன்படுத்தி பல பெண்கள் அழுதோ அல்லது அழுவது போல நடித்தோ காரியத்தை சாதித்துக் கொள்கிறார்களாம். இதுபோன்ற சம்பவங்களில் ஆண்களுக்கு அதிக கோபம் ஏற்படுகிறதாம். இருந்தாலும் பொறுத்துக் கொண்டு, சமாளித்து அமைதிப்படுத்துகிறார்களாம்.

பிரச்சனையை பெரிதாக்குவது
சாதாரண பிரச்சினைகளைக் கூட பெரிதாக வைத்து பிரச்சனை செய்யும் பழக்கம் பல பெண்களிடம் இருக்கிறது என்பது பல ஆண்களின் புகார். ஒன்றுமே இல்லாத பிரச்சினையைப் பெரிதாக்கி கண்ணீர் வடிக்கிறார்கள் என்கிறார்கள் ஆண்கள். அதாவது சாதாரணமாக கேட்டால் கிடைக்காது என்று கருதும் விஷயத்தை கண்ணீர் கலந்து கேட்கிறார்களாம் பெண்கள். இதையும் பல ஆண்கள் விரும்புவதில்லையாம்.

நேருக்கு நேர்
நேர்மையாக, நேருக்கு நேர், தைரியமாக, தெளிவாக பேசி கேட்கும் பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கிறதாம். மற்றபடி கண்ணீர் விட்டு காரியம் சாதிக்க நினைக்கும் பெண்களை ஆண்கள் வெறுக்கிறார்களாம்.